பெரம்பூர் தொகுதி வேட்பாளர் பட்டியலில் 2 விஜய், 2 ஜோசஃப்!
பெரம்பூர் தொகுதி வேட்பாளர் பட்டியலில் 2 விஜய், 2 ஜோசஃப் உள்ளனர்.
நடிகரும் தவெக தலைவருமான விஜய் போட்டியிடுவதால், சென்னை பெரம்பூர் தொகுதி அதிக கவனம் பெறும் தொகுதியாக மாறியிருக்கிறது. இந்த தொகுதியின் வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருக்கிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப். 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. அன்றைய தினம் பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்படவிருக்கின்றன.
பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, இன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. இதில் பெரும்பாலான முக்கிய வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பட்டுள்ளன.
Advertisement
இந்த நிலையில், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதில், விஜய் என்ற பெயரில் தவெக தலைவர் உள்பட இரண்டு பேரும், ஜோசப் என்ற பெயரில் விஜய் தவிர்த்து இரண்டு பேரும் வேட்பு மனு தாக்கல் செய்து களத்தில் உள்ளனர்.