ஆடிட்டர் தவறுக்காக விஜய்யின் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்க முடியுமா? உயர்நீதிமன்றம் கேள்வி
முதல்வர் விஜய்யின் தேர்தல் வெற்றிக்கு எதிரான மனு விசாரணை குறித்து...
பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் விஜய்யின் தேர்தல் வெற்றியை ரத்து செய்யக்கோரிய வழக்கை நிராகரிக்கக்கோரி விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணை நாளை (அக். 8) ஒத்திவைக்கப்பட்டது.
முதல்வர் விஜய்யின் தேர்தல் வேட்புமனுவில் ரூ. 30 கோடி சொத்தைத் தெரிவிக்காமல் மறைத்ததாக அவரின் தேர்தல் வெற்றியை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமி நாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், "நடிகராக இருந்த விஜய், தேர்தல் வேட்புமனுவில் ரூ. 600 கோடி சொத்தைக் காட்டியுள்ள நிலையில், ரூ. 30 கோடி மதிப்பிலான சொத்தைத் தெரிவிக்காமல் இருப்பது, அவருடைய தேர்தல் வெற்றியை எப்படி பாதிக்கும்?
Advertisement
Advertisement
சொத்துகளைக் குறைத்துக் காட்டியதற்காக, தேர்தலைச் செல்லாது என அறிவித்துவிட முடியுமா?
கோடீஸ்வரரிடம் அவருக்கு எங்கெல்லாம் சொத்து இருக்கிறது எனக் கேட்டால் அவருக்கு எப்படி தெரியும்? ஆடிட்டர் செய்த தவறுக்காக அவரின் (விஜய்) தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க முடியுமா?" எனக் கேள்வி எழுப்பினார்.
பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் விஜய்யின் தேர்தல் வேட்புமனுவில் ரூ. 600 கோடி சொத்து இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவருக்கு பண்ருட்டியில் இருக்கும் ரூ. 30 கோடி மதிப்பிலான சொத்தை வேட்புமனுவில் குறிப்பிடவில்லை எனக் கூறி, விஜய்யின் தேர்தல் வெற்றியை நிராகரிக்கக்கோரி தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இதனிடையே, பெரம்பூர் தொகுதியில் தன்னுடைய வெற்றியை ரத்து செய்யக்கோரிய தினேஷின் மனுவை நிராகரிக்கக்கோரி விஜய் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையை வியாழக்கிழமைக்கு (அக். 8) நீதிமன்றம் ஒத்திவைத்தது.
Hearing on the petition challenging CM Vijay's election victory in the Perambur constituency
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.