FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய்! கோரிக்கை மனுக்களைப் பெற்றார்!

முதல்வர் விஜய் பெரம்பூர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளது பற்றி..

முதல்வர் விஜய் - எம்எல்ஏ அலுவலகம் - கோப்புப் படம்
பகிர்:

முதல்வர் விஜய் தனது தொகுதியான பெரம்பூர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.

நாளை (நவ. 14) ஆம் குழந்தைகள் நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், நாளை விடுமுறை நாள் என்பதால் இன்று (நவ. 13 ) அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்படுகிறது.

Advertisement

Advertisement

அதன்படி அரசுப் பள்ளிகளில் 61,84,566 மாணவா்களுக்கு கேக் வழங்குவதற்காக தமிழக அரசு சாா்பில் ரூ. 9.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், சென்னை கொளத்தூரில் உள்ள அரசுப் பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு முதல்வர் விஜய் இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து, குழந்தைகளுக்கு வாழ்த்து அட்டைகளையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக பெரம்பூரில் உள்ள தனது எம்எல்ஏ அலுவலகத்திற்கு முதல்வர் விஜய் சென்றுள்ளார். பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.

summary

CM vijay in perambur constituency office

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.