பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய்! மக்களிடம் மனுக்களைப் பெற்றார்!
முதல்வர் விஜய், பெரம்பூர் தொகுதிக்குச் சென்று மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றது பற்றி...
முதல்வர் விஜய் இன்று தனது சொந்த தொகுதியான பெரம்பூர் தொகுதிக்குச் சென்று மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
சென்னை மாதவரத்தில் உள்ள ஆவின் பால் பண்ணையில் முதல்வர் விஜய் இன்று (அக். 7) காலை ஆய்வு செய்தார்.
அப்போது, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ரூ. 2.23 கோடியில் கட்டப்பட்ட மாநில ஆய்வக துணைக் கட்டடத்தையும் முதல்வர் விஜய் இன்று திறந்துவைத்தார். அங்கு ரூ. 152 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தையும் பார்வையிட்டார்.
Advertisement
Advertisement
இதையடுத்து முதல்வர் விஜய் தனது சொந்த தொகுதியான பெரம்பூர் தொகுதிக்குச் சென்றார்.
பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்துக்குச் சென்ற அவர், அங்கு காத்திருந்த மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
மேலும் இ- சேவை மூலமாக விண்ணப்பித்த மக்களுக்கு பல்வேறு சான்றிதழ்களையும் வழங்கினார்.
CM vijay sudden visit to his perambur constituency
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.