பெரம்பூர் தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் தரப்பு வாதம் நிறைவு!
பெரம்பூர் தொகுதியில் தனது வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகளை நிராகரிக்க வேண்டுமென முதல்வர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
பெரம்பூர் தொகுதியில் தனது வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகளை நிராகரிக்க வேண்டுமென முதல்வர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
சென்னை பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் விஜய் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன், திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் ஆகியோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பு நடைபெற்றுவருகிறது.
Advertisement
Advertisement
முதல்வர் விஜய் தரப்பில் இரண்டாவது நாளாக வாதங்கள் முன்வைக்கப்பட்டன. முதல்வர் விஜய் தரப்பில், பெரம்பூர் தொகுதி வேட்பு மனுவில் 600 கோடி ரூபாய்க்கு மேல் தனக்கும், மனைவிக்கும் சொந்தமான சொத்துகளின் விவரங்கள், வருமான வரி கணக்கு விவரங்கள் என எல்லா விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த தகவலையும் மறைக்கவில்லை; அனைத்து விவரங்களையும் 99 சதவீதம் வேட்புமனுவில் குறிப்பட்டுள்ளேன்; ஒரு சில தவறுகள் இருக்கலாம் தான். அதற்காக வேட்புமனுவை ஏற்றது தவறு என சொல்ல முடியாது. வேட்பு மனுவை ஏற்றது சரிதான் என வாதிடப்பட்டது.
இதன் அடிப்படையில், வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லாமல், தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தேர்தல் வழக்குகளை நிராகரிக்க வேண்டும் என முதல்வர் விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்த மனுதாரர்கள் தரப்பு வாதங்களுக்காக, விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Perambur election case: Arguments on behalf of Chief Minister Vijay's side conclude!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.