தில்லியில் மேலும் 150 பேருக்கு கரோனா தொற்று
தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 150 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 150 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
இன்று புதிதாக 150 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 6,35,481 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 6 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 10,864 ஆக உயர்ந்துள்ளது.
இன்று தொற்றில் இருந்து 153 பேர் குணமடைந்துள்ளதால் மொத்தம் 6,23,409 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 1,208 பேர் சிகிச்சையில் உள்ளனர்.