முகப்பு
இந்தியா

நாட்டின் வளர்ச்சிக்கு விவசாயிகளின் பங்கு முக்கியம்: பிரதமர்

விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நாட்டின் வளர்ச்சிக்கு விவசாயிகளின் பங்கு முக்கியமானது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:27 PM
பிரதமர் நரேந்திர மோடி
பகிர்:

விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நாட்டின் வளர்ச்சிக்கு விவசாயிகளின் பங்கு முக்கியமானது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் செளரி செளரா நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், ''நாட்டின் வளர்ச்சியில் விவசாயிகளின் பங்கு முக்கியமானது. இந்தியாவை சுயசார்பு நாடாக உருவாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

கடந்த 6 ஆண்டுகளாக விவசாயிகளை சுயசார்புடையவர்களாக மாற்றும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் விளைவாக பெருந்தொற்று மற்றும் பொதுமுடக்க காலத்திலும் விவசாயத் துறை சரிவடையவில்லை.

வேளாண் சட்டங்கள் விவசாயிகளை பாதிக்காது, நன்மையே செய்யும். 
விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் வேளாண் மண்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆயிரத்திற்கும் அதிகமான மண்டிகள் தேசிய அளவிலான வேளாண் சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளன.

நாட்டின் ஒற்றுமையே நமது முன்னுரிமை என்று நாம் உறுதிமொழி ஏற்க வேண்டும். நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுடனும் முன்னோக்கி செல்ல வேண்டும் என்று அவர் கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →