தில்லியில் 9, 11-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு
தில்லியில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கியுள்ளன.
தில்லியில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கியுள்ளன.
கரோனா பெருந்தொற்று காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், கரோனா பரவல் குறைந்து வருவதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், தில்லியில் இன்று 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு இன்று (பிப்.5) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 9 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மணீஷ் சிசோடியா அரசுப் பள்ளி மாணவர்களை நேரில் சென்று சந்தித்தார்.
தில்லியில் 10,12-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் ஜனவரி 18 ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில், 9, 11-ம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.