பச்சைப் புடவையில் சசிகலா; ஒசூரில் வரவேற்பு வளையங்கள் 
இந்தியா

பச்சைப் புடவையில் சசிகலா; ஒசூரில் வரவேற்பு வளையங்கள்

சொத்துக் குவிப்பில் சிறைத் தண்டனை முடிந்து சரியாக நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தமிழகம் திரும்புகிறார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா.

PTI


கிருஷ்ணகிரி: சொத்துக் குவிப்பில் சிறைத் தண்டனை முடிந்து சரியாக நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தமிழகம் திரும்புகிறார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா.

பெங்களூருவில் தான் தங்கியிருந்த பண்ணை வீட்டிலிருந்து காரில் புறப்பட்ட சசிகலா, கர்நாடக - தமிழக எல்லைப் பகுதியாக கிருஷ்ணகிரியை காலை 10 மணிக்கு வந்தடைந்தார்.

கிருஷ்ணகிரி எல்லையில், அவருக்கு மேள, தாள வாத்தியங்கள் முழங்க, பூக்கள் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கவிருக்கும் நிலையில் சசிகலாவின் வருகை மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 200  வாகனங்கள் புடை சூழ, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த பச்சை நிறப் புடவையில் சசிகலா தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்.

அவர் வரும் வழியில், அவரது காரில் இருந்த அதிமுக கொடியை காவல்துறையினர் அகற்றியதால், அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்த மற்றொரு வாகனத்தில் ஏறி சசிகலா தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

அத்திப்பள்ளி எல்லைப் பகுதியில் அதிமுக மற்றும் அமமுக கொடிகளை கையில் ஏந்திய ஏராளமானோர் சசிகலாவை வரவேற்றனர். 

கிருஷ்ணகிரி மாவட்டமே இன்று விழாக் கோலம் பூண்டுள்ளது. சசிகலா பயணிக்கும் பாதை முழுக்க பேனர்களும், வரவேற்பு பலகைகளும், போஸ்டர்களும், அலங்கார வளைவுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சாலைகளில், தலையில் கலசங்களுடன், பூங்கொத்து, பூமாலைகளுடன் ஏராளமான தொண்டர்கள் காத்திருப்பதையும் காண முடிகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலைக் காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

SCROLL FOR NEXT