முகப்பு
இந்தியா

இந்திய முஸ்லீம் என்பதில் பெருமை கொள்கிறேன்: குலாம் நபி ஆசாத்

இந்திய முஸ்லீம் என்பதில் நான் பெருமை கொள்கிறேன் என மாநிலங்களவையில் இன்று உரையாற்றிய குலாம் நபி ஆசாத் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:29 PM
இந்திய முஸ்லீம் என்பதில் பெருமை கொள்கிறேன்: குலாம் நபி ஆசாத்
பகிர்:


புது தில்லி: இந்திய முஸ்லீம் என்பதில் நான் பெருமை கொள்கிறேன் என மாநிலங்களவையில் இன்று உரையாற்றிய குலாம் நபி ஆசாத் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

பதவிக் காலம் நிறைவடையும் காங்கிரஸ் எம்.பி. குலாம் நபி ஆஸாத் மாநிலங்களவையில் இன்று தனது கடைசி உரையை ஆற்றினார்.

முன்னதாக, காங்கிரஸ் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் குலாம் நபி ஆசாத் ஓய்வு பெறவிருப்பதை முன்னிட்டு அவையில் இன்று பிரியாவிடை வழங்கப்பட்டது.

மாநிலங்களவை உறுப்பினர்கள் அளித்த பிரியாவிடை உரைக்கு நன்றி தெரிவித்து குலாம் நபி ஆஸாத் பேசுகையில்,  நாட்டில் தீவிரவாதமும் பயங்கரவாதமும் ஒழிக்கப்பட வேண்டும்.

பாகிஸ்தானுக்கு ஒரு போதும் செல்லாத அதிர்ஷ்டசாலி மக்களில் நானும் ஒருவன். பாகிஸ்தானில் நடக்கும் சில விரும்பத்தகாத விஷயங்கள் பற்றி படிக்கும் போது, நான் இந்திய முஸ்லீம் என்பதை நினைத்துப் பெருமை கொள்வேன் என்று கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →