காங்கிரஸ் பிரிந்து குழப்பத்தில் இருக்கிறது: பிரதமர் மோடி
பிரிந்து குழப்பத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சியால் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து சிந்திக்க முடியாது என பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் உரையாற்றினார்.
இந்தியாகாங்கிரஸ் பிரிந்து குழப்பத்தில் இருக்கிறது: பிரதமர் மோடி
பிரிந்து குழப்பத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சியால் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து சிந்திக்க முடியாது என பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் உரையாற்றினார்.
பிரிந்து குழப்பத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சியால் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து சிந்திக்க முடியாது என பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் உரையாற்றினார்.
இதுபற்றி மக்களவையில் அவர் ஆற்றிய உரை:
"நாட்டை 60 ஆண்டு காலம் ஆண்ட மிகப் பழைய கட்சியான காங்கிரஸின் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஒரு திசையிலும் மக்களவை உறுப்பினர்கள் வேறு ஒரு திசையிலும் செயல்படுகின்றனர். இப்படி பிரிந்து குழம்பியிருக்கும் கட்சியால், அந்தக் கட்சிக்கும் எந்த நல்லதும் செய்ய முடியாது, நாட்டின் பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பது குறித்து சிந்திக்க முடியாது. இதைவிட பெரிய துரதிருஷ்டம் எதுவும் இருக்க முடியாது.
மாநிலங்களவையிலும் காங்கிரஸ் உள்ளது. அங்குள்ள மூத்த தலைவர்கள் நிறைய உத்வேகத்துடன் விவாதிப்பார்கள், கருத்துகளை வெளிப்படுத்துவார்கள். மறுபுறம், மக்களவையில் ஒரு காங்கிரஸ் பிரிவு இருக்கிறது.
திட்டம் தீட்டி வியூகம் வகுத்து அவையை சீர்குலைக்க நினைக்கின்றனர். மக்கள் காணும் உண்மையை இவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இதுபோன்ற வியூகங்களால் மக்களின் நம்பிக்கையை வெல்ல முடியாது" என்றார் பிரதமர் மோடி.