இந்தியா

உத்தரகண்ட் வெள்ளம்: ஹெலிகாப்டரில் மக்களுக்கு நிவாரணம்

DIN

உத்தரகண்ட் மாநிலம் சிமோலியில் பனிப்பாறை வெடித்து நேரிட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

நிவாரணம் மற்றும் ரேஷன் பொருள்களை பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலம் வழியாக வந்து பெற்றுக்கொண்டனர்.

உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் மிகப்பெரிய பனிப்பாறை சரிந்ததால் தவுளிகங்கா ஆற்றில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (பிப்.7) வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கிளை நதிகளில் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நீா் மின் நிலையங்களில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டனர்.

அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து 6-வது நாளாக நடைபெற்று வருகிறது. இதுவரை 37 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT