முகப்பு
இந்தியா

அருணாசலில் முதல் முறையாகப் புதிதாக கரோனா பாதிப்பு இல்லை

அருணாச்சல பிரதேசத்தில் சனிக்கிழமை புதிதாக ஒருவருக்கும் கரோனா தொற்று பதிவாகவில்லை என்று மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:31 PM
கரோனா இறப்பு விகிதம் குறைந்து வருகிறது: மத்திய சுகாதாரத்துறை
பகிர்:

அருணாச்சல பிரதேசத்தில் சனிக்கிழமை புதிதாக ஒருவருக்கும் கரோனா தொற்று பதிவாகவில்லை என்று மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாநிலத்தில் கரோனா பாதிப்பு 16,832 ஆக உயர்ந்துள்ளது. அவற்றில் 5 பேர் சிகிச்சையில் உள்ளனர். தொற்று பாதிப்பிலிருந்து 16,771 பேர் இதுவரை மீண்டுள்ளனர். வைரஸ் பாதித்த 56 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மாநில கண்காணிப்பு அதிகாரி டாக்டர் லோப்சாங் ஜம்பா தெரிவித்தார்.

மாநிலத்தில் கரோனா மீட்பு விகிதம் 99.63 சதவீதமாக உள்ளது. அரசு இதுவரை 3.9 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. 

நிர்வாகம் இதுவரை 21,122 சுகாதார ஊழியர்களுக்குத் தடுப்பூசி போட்டுள்ளதாக மாநில நோய்த்தடுப்பு அதிகாரி டிமோங் பதுங் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.