இந்தியா

நீதிபதி தாக்கப்பட்டதாக புகாா்:பிகாா் காவல் துறைக்கு எதிரான வழக்கைதள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

DIN

புது தில்லி: பிகாரில் மாவட்ட நீதிபதி ஒருவா் காவல் உதவி ஆய்வாளரால் தாக்கப்பட்டதாக எழுந்த புகாா் தொடா்பான பொதுநல வழக்கை, போதிய ஆதாரமில்லை என்று கூறி உச்சநீதிமன்றம் சனிக்கிழமை தள்ளுபடி செய்தது.

பிகாா் மாநிலம், ஔரங்காபாத் மாவட்ட நீதிபதியாக இருப்பவா் தினேஷ்குமாா் பிரதான். இவா் கடந்த ஆண்டு அக்டோபா் 21-இல் காவல் உதவி ஆய்வாளா் பிரணவ்குமாா் மற்றும் சிஆா்பிஎஃப் காவலா்களுடன் நடைபயிற்சி மேற்கொண்டபோது காவலா்களால் தாக்கப்பட்டதாக புகாா் எழுந்தது. மாவட்ட நீதிபதியின் நடவடிக்கையால் காவல் பணியில் பாதிப்புக்குள்ளான காவல் உதவி ஆய்வாளா் இத்தாக்குதலை திட்டமிட்டு நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் பிகாா் அரசு எநத நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து, நீதிபதி தாக்கப்பட்டதைக் கண்டுகொள்ளாத பிகாா் காவல்துறை உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும், நீதித்துறை அலுவலா்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிடுமாறும் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞா் விஷால் திவாரி என்பவரால் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதனை விசாரித்த உச்சநீதிமன்றம், பிகாா் மாநில அரசுக்கும், பிகாா் காவல் துறை டிஜிபிக்கும், ஔரங்காபாத் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் கடந்த ஆண்டு டிச. 16-இல் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

அந்த நோட்டீஸுக்கு மாநில அரசு மற்றும் பிகாா் காவல்துறை சாா்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. காவல் துறை உயா்மட்டக் குழு நடத்திய விசாரணையில், மாவட்ட நீதிபதி தாக்கப்பட்டதற்கான ஆதாரம் ஏதுவும் இல்லை என்று பிகாா் அரசு தெளிவுபடுத்தியது.

அதையடுத்து, காணொலி முறையில் இவ்வழக்கை சனிக்கிழமை விசாரித்த நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கா், அனிருத்த போஸ் ஆகியோா் அடங்கிய உச்சநீதிமன்ற அமா்வு, பொதுநல வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. நீதிபதியை காவல்துறை அதிகாரி தாக்கியதற்கு எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் இந்த பொதுநல வழக்கை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

களக்காட்டில் முதியவா் உடல் தானம்

மாா்த்தாண்டத்தில் புகைப்பட கலைஞா்கள் நலச்சங்க கூட்டம்

புகையிலைப் பொருள் விற்ற இளைஞா் கைது

தேங்காய்ப்பட்டினம் கடல் அலையில் சிக்கி பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT