மகாராஷ்டிரத்தில் லாரி கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி, 2 பேர் காயம்
மகாராஷ்டிரத்தின் ஜல்கான் மாவட்டத்தின் கிங்கான் கிராமம் அருகே பப்பாளிப் பழம் ஏற்றிச் சென்ற லாரியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
மகாராஷ்டிரத்தின் ஜல்கான் மாவட்டத்தின் கிங்கான் கிராமம் அருகே பப்பாளிப் பழம் ஏற்றிச் சென்ற லாரியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
திங்கள்கிழமை அதிகாலை 1 மணியளவில் லாரி கட்டுப்பாட்டை இழந்து கோயிலுக்கு அருகே கவிழ்ந்ததாக யவல் காவல்நிலைய ஆய்வாளர் சுதிர் பாட்டீல் தெரிவித்தார்.
இறந்தவர்கள் ராவர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆவார். இருவர் காயமடைந்த நிலையில் இங்குள்ள கிராமப்புற மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பாட்டீல் கூறியுள்ளார்.
Advertisement
விபத்தில் உயிரிழந்தவர்கள் 7 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், இருவருக்கு மேற்பட்டோர்கள் காயமடைந்துள்ளனர்.
சிலர் வாகனத்தின் அடியில் சிக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களின் உடல்களை அகற்றும் பணி மற்றும் லாரியை தூக்க கிரேன் ஒன்றும் சம்பவ இடத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன் என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.