'மக்களிடம் கொள்ளை' - சிலிண்டர் விலை உயர்வு குறித்து ராகுல் காந்தி!
சிலிண்டர் விலை உயர்வு குறித்து மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
சிலிண்டர் விலை உயர்வு குறித்து மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சிலிண்டர் விலை உயர்வு குறித்த செய்திகளை டேக் செய்து, 'இரண்டு பேரின் வளர்ச்சிக்காக பொதுமக்களிடமிருந்து பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது' என்று பதிவிட்டுள்ளார்.
வேளாண் சட்டங்கள், பொருளாதார வீழ்ச்சி குறித்து மத்திய அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
தில்லியில் எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ .50 அதிகரித்து 14.2 கிலோகிராம் சிலிண்டர் ரூ .769 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.735-லிருந்து ரூ.785 ஆக உயர்ந்தது.
கடந்த 4-ஆம் தேதி சிலிண்டர் விலை ரூ.25 உயா்த்தப்பட்ட நிலையில், விலை உயர்வு இம்மாதத்தில் இது இரண்டாவது முறை ஆகும். இதனால் சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் ரூ. 75 உயர்ந்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.