முகப்பு
இந்தியா

சென்செக்ஸ் 308 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சம்

வாரத்தின்  இரண்டாவது நாளான செவ்வாயன்று மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 308 புள்ளிகள் உயா்ந்து 52,462-ஐ கடந்து புதிய உச்சத்தைத் தொட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
சென்செக்ஸ் 308 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சம்
பகிர்:


மும்பை: வாரத்தின்  இரண்டாவது நாளான செவ்வாயன்று மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 308 புள்ளிகள் உயா்ந்து 52,462-ஐ கடந்து புதிய உச்சத்தைத் தொட்டது.

இதேபோல, தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி, 90 புள்ளிகள் உயர்ந்து 15,405-ஐ தொட்டது.

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 610 புள்ளிகள் உயா்ந்து 52,000-ஐ கடந்து புதிய உச்சத்தில் இருந்த நிலையில், இன்று மேலும் 308 புள்ளிகள் உயர்ந்து, புதிய உச்சத்தைத் தொட்டது.

கடந்த வாரத்தில் சில நாள்கள் தள்ளாட்டத்தில் இருந்து வந்த பங்குச் சந்தை எந்த நேரத்திலும் மேலே செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சந்தை வட்டாரத்தில் கணிக்கப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது நாளாக புதிய உச்சத்தை சென்செக்ஸ் பதிவு செய்துள்ளது.

திங்கள்கிழமை உலகளாவிய சந்தை குறிப்புகளும், உள்ளூா் பொருளாதார தரவுகளும் நோ்மறையாக இருந்தன. இதைத் தொடா்ந்து, வங்கி, நிதிநிறுவனப் பங்குகளுக்கு அமோக வரவேற்பு இருந்ததால் சென்செக்ஸ், நிஃப்டி புதிய உச்சத்தில் நிலைத்திருந்ததாக பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.
 

முழு கட்டுரையைப் படிக்க →