முகப்பு
இந்தியா

கடந்த 24 மணி நேரத்தில் 18 மாநிலங்களில் யாரும் கரோனாவுக்கு பலியாகவில்லை: மத்திய அரசு

​உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட கரோனா தொற்றுக்கு பலியாகவில்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:33 PM
கோப்புப்படம்
பகிர்:



உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட கரோனா தொற்றுக்கு பலியாகவில்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.

இதுபற்றி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது:

"18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு யாரும் பலியாகவில்லை. புதன்கிழமை காலை 8 மணி வரை சுமார் 90 லட்ச தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளன. 

Advertisement

61,50,922 சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒரு முறையும்,  2,76,377 சுகாதாரப் பணியாளர்களுக்கு இரண்டு முறையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 25,71,931 முன்களப் பணியாளர்களுக்கு ஒரு முறை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

பிப்ரவரி 16 மாலை 4 மணி வரை தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் 36 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 29 பேர் பலியாகியுள்ளனர். 36 பேரில் 22 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்தனர். 2 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர், 12 பேர் பலியாகியுள்ளனர்.

பலியான 29 பேரில் 17 பேர் மருத்துவமனைக்கு வெளியே பலியாகியுள்ளனர். 12 பேர் மருத்துவமனையில் பலியாகியுள்ளனர். தடுப்பூசி செலுத்தப்பட்டதால் தீவிர பக்கவிளைவு ஏற்பட்டதாகவோ, தடுப்பூசி காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக இதுவரை எதுவும் பதிவாகவில்லை."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments