மகாராஷ்டிரத்தில் மேலும் 5427 பேருக்கு கரோனா தொற்று
மகாராஷ்டிரத்தில் வியாழக்கிழமை 5427 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் வியாழக்கிழமை 5427 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 20,81,520 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,543 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 38 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 19,87,804 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்தம் 51,669 பேர் பலியாகியுள்ளனர்.
Advertisement
இன்றைய தேதியில் அங்கு 40,858 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.