பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உருவாகியுள்ளன.
சுகாதாரத் துறையின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவினர் இதுப ற்றி கூறுகையில், மாநிலத்தில் மீண்டும் கரோனா அலை எழாமல் தடுக்க கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதிக கரோனா நோயாளிகள் இருக்கும் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படும் நடைமுறை கடந்த ஆண்டு நாட்டின் பல பகுதிகளில் இருந்தது. கரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை அறிவிக்கும் நடைமுறையும் கைவிடப்பட்டது.
ஆனால், தற்போது மீண்டும் கர்நாடகத்தில் கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டால், அப்பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.