அமைச்சர் மீதான வெடிகுண்டு தாக்குதலில் சதி: மம்தா
மேற்கு வங்க ரயில் நிலையத்தில் அமைச்சர் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சதித்திட்டம் நிறைந்தது என்று முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க ரயில் நிலையத்தில் அமைச்சர் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சதித்திட்டம் நிறைந்தது என்று முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டம் நிம்திதா ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த அம்மாநில தொழிலாளர் நலத்துறை ஜாகிர் உசைன் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் அவரது கால் மற்றும் கைகள் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அவரை நேரில் சென்று சந்தித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,
அமைச்சர் மீதான இந்த தாக்குதல் சதித்திட்டம் நிறைந்தது. தாக்குதல் நடைபெற்றபோது ரயில் நிலையத்தில் அதிகாரிகள் யாரும் இல்லை. விளக்குகள் கூட எரியவில்லை. அசம்பாவிதம் நடைபெற்ற இடம் ரயில்வேக்கு சொந்தமானது. இதில் முறையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று கூறினார்.
மேலும், ரயில்வேத்துறை மத்திய அமைச்சரகத்தின் கீழ் செயல்படுகிறது. ஜாகிர் உசேன் பிரபலமான தலைவர் என்பதால், அவரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.