இந்தியா

எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே நாளை 10-ம் கட்டப் பேச்சு

இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்சினை தொடர்பாக நாளை 10-ம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

DIN

இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்சினை தொடர்பாக நாளை 10-ம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. ராணுவ கமாண்டர் அளவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து வீரர்கள் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, மற்ற பகுதிகளிலிலிருந்தும் வீரர்களை வெளியேற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

ஏற்கெனவே நடத்தப்பட்ட 9-ம் கட்டப் பேச்சுவார்த்தையில் கிழக்கு லடாக்கில் இருந்து முன்கள வீரர்கள் திரும்பப் பெறப்பட்டனர்.

கிழக்கு லடாக்கில் பிப்ரவரி 10-ம் தேதி முதல் இரு தரப்புகளும் முன் அணிப் படைகளை விலக்கிக் கொள்வதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளதாக சீனா அறிவித்திருந்தது.

இருநாட்டு ராணுவத் தளபதிகள் அளவிலான 9-வது சுற்று பேச்சுவார்த்தையில் இரு தரப்புகளும் எட்டிய ஒருமித்த கருத்தின் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சைபர் பாதுகாப்பு குறித்து அடிக்கடி எழுப்பப்படும் கேள்வி-பதில்கள்!

டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு குறைப்பு

பருவமழை: சென்னை கட்டுப்பாட்டு மையத்தில் உதயநிதி ஆய்வு!

தொடர்ந்து உயரும் தங்கம் விலை: இன்று பவுன் எவ்வளவு தெரியுமா..?

கோவா முன்னாள் முதல்வர் ரவி நாயக் காலமானார்!

SCROLL FOR NEXT