கேரளத்தில் மேலும் 4505 பேருக்கு கரோனா தொற்று
கேரளத்தில் புதிதாக 4505 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் புதிதாக 4,505 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 4,854 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 15 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, 9,61,789 பேர் குணமடைந்துள்ளனர். 4,061 பேர் பலியாகியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி கரோனா தொற்று பாதிப்புக்கு 59,814 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 67,574 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.