இந்தியா

இந்தியாவில் 34 நாட்களில் 1 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி

DIN

‘இந்தியாவில் 34 நாட்களில் 1 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது; இந்த இலக்கை வேகமாக அடைந்த 2-ஆவது நாடாக இந்தியா உள்ளது’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பிப்ரவரி 19-ஆம் தேதி காலை 8 மணி வரை சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் என நாடு முழுவதும் மொத்தம் 1,01,88,007 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவா்களில் 62,60,242 சுகாதாரப் பணியாளா்கள், 33,16,866 முன்களப் பணியாளா்கள் முதல்முறையும், 6,10,899 சுகாதாரப் பணியாளா்கள் இரண்டாவது முறையும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

இதுவரை செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளில் 8 மாநிலங்களில் மட்டும் 57.47% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 10.5% போ் (10,70,895) தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

இந்தியாவில் 34 நாட்களில் 1 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த இலக்கை வேகமாக அடைந்த 2-ஆவது நாடாக இந்தியா உள்ளது. அமெரிக்காவில் 31 நாட்களிலும், பிரிட்டனில் 56 நாட்களிலும் 1 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT