முகப்பு
இந்தியா

தமிழகத்தில் 88,936 வாக்குச் சாவடிகள்: தேர்தல் ஆணையம்

சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் 88,936 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:37 PM
பகிர்:

சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் 88,936 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா தெரிவித்துள்ளார்.

5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பது குறித்து செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.

அதில் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் அவற்றின் தொகுதிகள் குறித்து அவர் கூறியதாவது,

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும், கேரளத்தில் 140 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளிலும், அசாமில் 126 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறவுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் மொத்தம் 824 தொகுதிகளில் 18.68 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

5 மாநிலங்களில் மொத்தம் 2.7 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. ஒரு வாக்குச் சாவடியில் 1,000 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.

அனைத்து வாக்குச்சாவடிகளும் தரைதளத்தில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். கடந்த தேர்தலை ஒப்பிடும்போது 34.73 சதவிகிதம் வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்படவுள்ளன.

வீடு வீடாக சென்று பரப்புரையில் ஈடுபடுவதற்கு 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியாளர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்.

வாக்காளர்களின் பாதுகாப்பு மிக மிக முக்கியம் என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்படும். 

பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதலாக துணை ராணுவப் படையினர் குவிக்கப்படுவர்.

தமிழகத்தில் தேர்தல் பார்வையாளராக தேவேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.