அமைச்சர் ராஜ்நாத் சிங் 
இந்தியா

பாலாகோட் தாக்குதல் நிகழ்ந்த தினம்: இந்திய விமானப் படைக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு

பாலாகோட் தாக்குதல் சம்பவத்தில் கிடைத்த வெற்றி பயங்கரவாதத்துக்கு எதிராக செயல்படும் இந்தியாவின் உறுதியை வெளிப்படுத்தியது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

DIN

பாலாகோட் தாக்குதல் சம்பவத்தில் கிடைத்த வெற்றி பயங்கரவாதத்துக்கு எதிராக செயல்படும் இந்தியாவின் உறுதியை வெளிப்படுத்தியது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு, கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் புவ்வாமா மாவட்டத்தில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் மத்திய ரிசா்வ் காவல் படையைச் (சிஆா்பிஎஃப்) சோ்ந்த 40 வீரா்கள் பலியாகினா்.

இதற்கு பதிலடி தரும் விதமாக அதே ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள பாலாகோட் பகுதியில் இந்திய விமானப் படையின் போா் விமானங்கள் தாக்குதல் நடத்தி அங்கிருந்த பயங்கரவாத முகாம்களை அழித்தன.

இந்தத் தாக்குதல் நிகழ்ந்து வெள்ளிக்கிழமையுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இந்திய விமானப் படையைப் பாராட்டி பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சுட்டுரையில் பதிவிட்டதாவது:

இந்திய விமானப் படையின் அசாதாரணமான தீரத்துக்கும், விடாமுயற்சிக்கும் தலைவணங்குகிறேன். பாலாகோட் தாக்குதலில் கிடைத்த வெற்றி பயங்கரவாதத்துக்கு எதிராக செயல்படும் இந்தியாவின் உறுதியை வெளிப்படுத்தியது. இந்தியாவை பாதுகாப்பாக வைத்திருக்கும் ஆயுதப் படைகளை நினைத்து பெருமையாக உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT