இந்தியா

தில்லியில் 37 ஆவது நாளாக போராட்டத்தைத் தொடரும் விவசாயிகள்!

DIN

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 37 ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தில்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வரும் சூழ்நிலையிலும் அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். 

இதுவரை மத்திய அரசுக்கும், விவசாய சங்கங்களுக்கும் இடையே புதன்கிழமை தொடர்ந்து 6 ஆவது முறையாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. 

குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு உறுதி செய்ய வேண்டும், வேளாண் சட்டங்களை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என தங்கள் கோரிக்கையை வலுவாக முன்வைத்துள்ளனர். 

வருகிற ஜனவரி 4 ஆம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனில் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம் என்று கிசான் மஸ்தூர் சன்ஹர்ஷ் கமிட்டி உறுப்பினர் சுக்விந்தர் சிங் தெரிவித்தார். 

எங்களிடம் 6 மாதங்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் உள்ளன. சுற்றுச்சூழல் மற்றும் மின்சார சட்டம் தொடர்பான பிரச்சினைகளை தீர்த்தால் நாங்கள் போராட்டத்திலிருந்து பின்வாங்குவோம் என்று அரசு நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது' என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி: கடலில் மூழ்கி 4 மருத்துவ மாணவர்கள் பலி

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

SCROLL FOR NEXT