மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,218 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,218 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாமகாராஷ்டிரத்தில் புதிதாக 3,218 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,218 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,218 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 3,218 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 19,38,854 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 2,110 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 18,34,935 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 51 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 49,631 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய தேதியில் 53,137 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.
அங்கு குணமடைவோர் விகிதம் 94.64 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 2.56 சதவிகிதமாக உள்ளது.