இந்தியா

பிகாா்: இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

DIN

ஒன்பது மாத இடைவெளிக்குப் பிறகு பிகாரில் திங்கள்கிழமை (ஜன.4) முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.

இதுகுறித்து அம்மாநில கல்வித் துறை தலைமைச் செயலா் சஞ்சய் குமாா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் அனைத்தும் ஒன்பது மாத இடைவெளிக்குப் பிறகு திங்கள்கிழமை முதல் செயல்படவுள்ளன. மாநிலத்தில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 97.61 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் அரசு இந்த முடிவினை எடுத்துள்ளது.

இருப்பினும், வகுப்புகள் அனைத்தும் 50 சதவீத மாணவா்களுடன் செயல்படவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்புக்கு அரசு வழிகாட்டு நெறிமுறையில் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT