முகப்பு
2020-இல் நிலவிய கடுமையான வானிலை நிகழ்வுகளால் நாட்டில் 1,500 பேர் பலி
இந்தியா

2020-இல் நிலவிய கடுமையான வானிலை நிகழ்வுகளால் நாட்டில் 1,500 பேர் பலி

கனமழை, வெள்ளம், நிலச்சரிவு மற்றும் குளிர் அலைகள் உள்ளிட்ட கடுமையான இயற்கை நிகழ்வுகளால் நாட்டில் 2020ஆம் ஆண்டில் மட்டும் 1500க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
2020-இல் நிலவிய கடுமையான வானிலை நிகழ்வுகளால் நாட்டில் 1,500 பேர் பலி
பகிர்:

கனமழை, வெள்ளம், நிலச்சரிவு மற்றும் குளிர் அலைகள் உள்ளிட்ட கடுமையான இயற்கை நிகழ்வுகளால் நாட்டில் 2020ஆம் ஆண்டில் மட்டும் 1500க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டில் கரோனா தொற்று பாதிப்பு நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இயற்கை நிகழ்வுகளும் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தின. முக்கியமாக கனமழை காரணமாக பிகார், கேரளம் மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் அதிக பாதிப்புகளை சந்தித்தன.

இந்நிலையில் 2020ஆம் ஆண்டில் பதிவான வானிலை நிகழ்வுகள் குறித்து இந்திய வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி 2020 ஆம் ஆண்டு கடந்த 120 ஆண்டுகளில் பதிவான எட்டாவது வெப்பமான ஆண்டாகும். அதிக வெப்பம்  மிகுந்த 15 ஆண்டுகளில் 12 ஆண்டுகள் 2006 ஆண்டு முதல் 2020 ஆண்டு வரையிலான காலத்தில் பதிவானவை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 முதல் 2020 வரையிலான பத்தாண்டுகள் 2001 தொடக்கம் முதலான ஆண்டுகளிலிருந்து இதுவரை பதிவான அதிக வெப்பமான ஆண்டுகளாகும்.  2020 ஆம் ஆண்டில் மட்டும் கனமழை, வெள்ளம், புயல்கள், வெப்பம் மற்றும் குளிர்காற்று ஆகிய வானிலை நிகழ்வுகளால் நாடு முழுவதும் 1500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை காலத்தில் நாடு முழுவதும் மழைப்பொழிவு இயல்பை விட 109% அதிகமாக பெய்துள்ளதாக தெரிவித்துள்ள வானிலை மையம் 2020 ஆம் ஆண்டில், இந்தியக் கடல்பகுதிகளில் ஆம்பன், நிவர், புரவி உள்ளிட்ட 5 வலிமையான புயல்கள் உருவானதாகக் குறிப்பிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →