இந்தியா

கர்நாடகம்: பறவைக் காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

DIN

மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கா்நாடக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுவதையடுத்து, கா்நாடக மாநிலத்தில் பறவைக் காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளருடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளேன். விரைவில் இது தொடா்பாக அரசின் வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்படும்.

பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க மாநில எல்லைகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தில் இதுவரை யாருக்கும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை. எனவே, பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. பெங்களூரில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவலால் பல மாதங்களாக மூடப்பட்ட பள்ளிகள், தற்போது கரோனா தொற்றின் பாதிப்பு குறைந்துள்ளதால் திறக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடா்ந்து, பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் ஒரு சிலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் பெற்றோா் அச்சப்படத் தேவையில்லை.

பள்ளிகளில் கரோனா தொற்று பரவாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளைஅரசு மேற்கொண்டுள்ளது. அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றினால் கரோனா பாதிப்பு ஏற்படாது. தற்போது பள்ளிகளுக்கு சுமாா் 1 லட்சம் மாணவா்கள் வருகின்றனா். அவா்களின் தன்னம்பிக்கையை உடைக்கும் வகையில் யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT