இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: 4-வது நாளாக விமான சேவை ரத்து

DIN

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக 4-வது நாளாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாள்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் கடந்த 3 நாள்களாக விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் பனிப்பொழிவால்  விமான ஓடுதளத்தில் பனி படர்ந்துள்ளதால், விமானங்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

பனிப்புகையாலும், ஓடுதளத்தில் படர்ந்துள்ள பனியாலும், விமானங்களை இயக்க முடியவில்லை என்றும், பனிகளை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஓடுதளம் முழுமையாக தயாரான பிறகும், வானிலை முன்னேற்றமடைந்த பிறகும் விமானங்களை இயக்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT