இந்தியா

உ.பி.: ஜன. 28-இல் 12 சட்ட மேலவை உறுப்பினர் பதவிக்கு தேர்தல்

DIN


உத்தரப் பிரதேசத்தில் இந்த மாத இறுதியில் காலியாகவுள்ள 12 சட்ட மேலவை உறுப்பினர் பதவிக்கு வரும் 28-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று (புதன்கிழமை) அறிவித்தது.

இதுதவிர பிகாரில் பாஜக தலைவர் சுஷில் மோடி மாநிலங்களவைக்குத் தேர்வானார், வினோத் நரைன் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றார். இதனால், அவர்கள் பொறுப்பு வகித்த மேலவை உறுப்பினர் பதவிக்கும் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. ஆந்திரத்தில் கடந்தாண்டு நவம்பர் மாதம் சட்ட மேலவை உறுப்பினர் போதுல சுனிதா ராஜிநாமா செய்தார். இதனால், அந்தப் பொறுப்புக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

இவை அனைத்திற்கும் ஜனவரி 28-இல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நடைபெற்று ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம், ஜலகண்டபுரம் மேம்பாலம் அருகே 3 உடல்கள்: கொலையா?

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT