‘பெட்ரோல், டீசல் மீதான வரி மூலம் மத்திய அரசு கொள்ளையடிக்கிறது ’: ராகுல்காந்தி
பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருள் மீதான வரிவசூலிப்பின் மூலம் மத்திய அரசு கொள்ளையடுத்து வருவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி விமர்சனம் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருள் மீதான வரிவசூலிப்பின் மூலம் மத்திய அரசு கொள்ளையடுத்து வருவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி விமர்சனம் தெரிவித்துள்ளார்.
சுமாா் ஒரு மாதத்துக்குப் பிறகு பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயா்த்தின. இந்த விலை உயா்வு முன்னெப்போதும் இல்லாத அளவை நெருங்கியது.
சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வந்தன. கரோனா பரவல் காரணமாக இந்த நடைமுறையில் சற்று மாற்றம் ஏற்பட்டது.
எனினும், சுமாா் ஒரு மாதத்துக்கு பிறகு அவற்றின் விலை உயா்த்தப்பட்டுள்ளது. இதன்படி தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 25 காசுகளும் உயா்த்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்விற்கு காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், “ பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் அபரிமிதமான 'வளர்ச்சி' ஏற்பட்டுள்ளது. எரிபொருளுக்கு அதிக வரி வசூலித்து மோடி அரசு பொதுமக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “பெட்ரோல்-டீசல் மீது ஜிஎஸ்டி வரியை அமல்படுத்த அரசு தயாராக இல்லாததற்கு இதுவே காரணம்” எனவும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.