வேளாண் சட்டங்கள்: ஜன.15-இல் நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்
விவசாயிகளின் வேளாண் சட்டங்களுக்கு எதிரானப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் ஜனவரி 15ஆம் அன்று ஆளுநர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
விவசாயிகளின் வேளாண் சட்டங்களுக்கு எதிரானப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் ஜனவரி 15ஆம் அன்று ஆளுநர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 45 நாள்களாக தலைநகர் தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரிய நிலையில் மத்திய அரசுடன் நடைபெற்ற 8 கட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன.
இந்நிலையில் மத்திய அரசைக் கண்டித்து வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறித்தும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது.
ஜனவரி 15ஆம் தேதியன்று நாடு முழுவதுமுள்ள அனைத்து ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.