ஜன. 16-ல் இந்தியா முக்கிய அடியெடுத்து வைக்கிறது: மோடி
கரோனா தொற்றுக்கு எதிராக ஜனவரி 16-ஆம் தேதி இந்தியா முக்கிய அடியெடுத்து வைக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்றுக்கு எதிராக ஜனவரி 16-ஆம் தேதி இந்தியா முக்கிய அடியெடுத்து வைக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், நாடு முழுவதும் ஜனவரி 16-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது.
முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் 3 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ''கரோனாவுக்கு எதிராக இந்தியா வரும் 16-ஆம் தேதி முக்கிய அடியெடுத்து வைக்கிறது. அந்த நாள் முதல் இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.
மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்பட முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறினார்.