இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் போலி மதுபானம் அருந்திய 11 பேர் பலி

IANS

மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் போலி மதுபானம் அருந்தியதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

இதுதொடர்பாக காவல்துறை கூறியதாவது, 

மொரேனா மாவட்டத்தில் அதிகப்படியான மது அருந்தியதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதா அல்லது போலி மதுவால் உயிரிழந்தனரா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

திங்கள்கிழமை இரவு சுமவாலியில் நான்கு பேரும், மன்பூர் கிராமங்களில் 7 பேரும்  போலி மது அருந்தியதால் இறந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மொரேனா மாவட்ட மருத்துவமனை மற்றும் குவாலியர் மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.

இறப்புக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக சம்பல் காவல் ஆய்வாளர் மனோஜ் சர்மா தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

SCROLL FOR NEXT