முகப்பு
இந்தியா

நாட்டில் புதிதாக 15,968 பேருக்கு கரோனா உறுதி; மேலும் 202 பேர் பலி

நாட்டில் புதிதாக 15,968 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு 1,04,95,147 ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
கோப்புப்படம்
பகிர்:

நாட்டில் புதிதாக 15,968 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு 1,04,95,147 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

புதன்கிழமை காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 15,968 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.  இதனால் மொத்த பாதிப்பு 1,04,95,147 ஆக அதிகரித்தது. அதேவேளையில் நாட்டில் கரோனா பாதித்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,01,29,111 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனா பாதித்தவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் 202 பேர் பலியான நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 1,51,529 ஆக உள்ளது. மேலும் நேற்று மட்டும் 17,817 பேர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இன்று காலை நிலவரப்படி நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2,14,507 ஆக இருக்கிறது.

மேலும், நேற்று 8,36,227 மாதிரிகள் உள்பட இதுவரை 18.34 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →