முகப்பு
இந்தியா

கரோனா முன்களப் பணியாளர்களுக்காக நலத் திட்டம்: கேஜரிவால்

கரோனா முன்களப் பணியாளர்களுக்காக புதியதாக நலத்திட்டம் தொடங்கவுள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்
பகிர்:


கரோனா முன்களப் பணியாளர்களுக்காக புதியதாக நலத்திட்டம் தொடங்கவுள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தில்லியில் கரோனா மூன்றாவது அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், கரோனா முன்களப் பணியாளரான ஹிதேஷ் குப்தா என்ற மருத்துவர் உயிரிழந்தார்.

அவரது குடும்பத்தாரை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதனையடுத்து தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரோனா தடுப்பூசி குறித்து தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம். மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை இலவசமாக கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளேன்.

தில்லி மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று கூறினார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →