வடமேற்கு மாநிலங்களில் குளிர் அதிகரிக்க வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்
பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட வடமேற்கு மாநிலங்களில் அடுத்த 2 நாள்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட வடமேற்கு மாநிலங்களில் அடுத்த 2 நாள்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு இந்தியாவில் வறண்ட காற்றின் தாக்கம் காரணமாக பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர், தில்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் கிழக்கு மத்தியப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் அடுத்த 2 நாட்களில் குளிர்ந்த அலை அல்லது கடுமையான குளிர் அலை வீசக்கூடும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்காரணமாக 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த இரண்டு நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், லட்சத்தீவுப் பகுதிகளில் மிதமான இடியுடன் கூடிய மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.