பஞ்சாபில் பறவைக் காய்ச்சல் உறுதி
பஞ்சாபில் இரண்டு பறவைகளின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில், பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாபில் இரண்டு பறவைகளின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில், பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொஹாலியில் உள்ள பண்ணையைச் சேர்ந்த இரண்டு கோழிகளின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், அவற்றிற்கு பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக பேசிய பஞ்சாப் தலைமைச் செயலாளர் வினி மஹாஜன், பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
விலங்குகள் நல வாரியம் மூலம் தொற்று பரவும் அபாயமுள்ள கோழிகளை பாதுகாப்பாக அழிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பண்ணைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உள்படுத்தப்படும் எனவும் கூறினார்.
ஏற்கெனவே கேரளம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாசல பிரதேசம், ஹரியாணா, குஜராத், தில்லி உள்ளிட்ட 10க்கும் அதிகமான மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.