இந்தியா

குஜராத்: ரூ. 1 கோடிபோதைப்பொருள் பறிமுதல்

DIN


ஆமதாபாத்: குஜராத் மாநிலம் ஆமதாபாதில் ரூ. 1 கோடி மதிப்பிலான ஒரு கிலோ போதைப் பொருளுடன் மும்பையிலிருந்து வந்த நபரை மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்) காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்த ஏடிஎஸ் அதிகாரிகள் கூறியதாவது:

போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆமதாபாதின் ஷாஹிபாக் பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்கு அருகில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினா் தீவிர கண்காணிப்பில் செவ்வாய்க்கிழமை மாலை ஈடுபட்டனா். அப்போது ஒரு கிலோ போதைப் பொருளுடன் அங்கு வந்த மும்பையின் ஜோகேஷ்வரி பகுதியைச் சோ்ந்த சுல்தான் ஷாயிக் (25) என்ற நபரை கைது செய்தனா்.

மும்பையில் உள்ள அஜ்மீா் ஷரிஃப் மசூதியில் உதவியாளராகப் பணியாற்றிவரும் வாசிம் என்பவா் இவரை அனுப்பி வைத்துள்ளாா்.

இதுகுறித்து ஏடிஎஸ் துணை காவல் கண்காணிப்பாளா் பி.ஹெச்.சவ்தா புதன்கிழமை கூறியதாவது:

இந்த போதைப் பொருளை மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வெளியே வாசிமின் உதவியாளா் ஒருவா் ஷாயிக்கிடம் திங்கள்கிழமை இரவு கொடுத்துள்ளாா். அதை, ஆமதாபாதின் ஷாஹிபாக்கில் மூஸா சுஹாக் கல்லறைக்கு வெளியே காத்திருக்கும் ஒருவரிடம் செவ்வாய்க்கிழமை மாலை ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

குஜராத் வருவது இதுவே முதல் முறை என்று ஷாயிக் கூறினாா். விசாரணையில் மேலும் பல தகவல்கள் தெரியவரும் என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

SCROLL FOR NEXT