இந்தியா

கூட்டாட்சித் தத்துவத்தை அழிக்கும் முயற்சியில் மத்திய அரசு: சிரோன்மணி அகாலிதளம்

DIN

பாஜக தலைமையிலான மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் விதத்தில் செயல்படுவதாக சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம் சிங் சந்துமஜ்ரா தெரிவித்தார். 

பஞ்சாபிற்கான ஊரக வளர்ச்சி நிதியை தடுத்து நிறுத்தியதாக மத்திய அரசை விமர்சித்த 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: 

பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்குடன் எங்களுக்கு அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால், மாநிலத்திற்கான ஊரக வளர்ச்சி நிதியை மத்திய அரசு தடுத்து நிறுத்துவதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.பஞ்சாபிற்கு ஊரக வளர்ச்சி நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு நிறுத்துவது அரசியலமைப்பிற்கு விரோதமானது.

நாங்கள் ஒரே கொள்கையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்று நம்புகிறோம். ஆனால், மத்திய அரசின் இம்மாதிரியான நடவடிக்கைகள் நாடாளுமன்ற ஆட்சி முறையிலிருந்து ஜனாதிபதி ஆட்சி முறைக்கு மாறுவது போன்றுள்ளது. 

பட்ஜெட்டில் பல்வேறு மாநிலங்களை அனுமதிக்காததன் மூலம் கூட்டாட்சி கட்டமைப்பு அவிழ்க்கப்படுகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார். 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2020 செப்டம்பரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சிரோன்மணி அகாலிதளம் விலகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பம் தரும் தினப்பலன்

தினம் தினம் திருநாளே!

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT