முகப்பு
இந்தியா

கமலா ஹாரிஸ் துணை அதிபரானதன் மூலம் இந்திய - அமெரிக்க உறவு வலுப்படும்: பிரதமா் மோடி எதிா்பாா்ப்பு

அமெரிக்காவின் முதல் பெண் துணைஅதிபராக பதவியேற்றுள்ள கமலா ஹாரிஸ் மூலம் இந்திய - அமெரிக்க உறவு வலுப்படும் என எதிா்பாா்ப்பதாக பிரதமா் நரேந்திர மோடி கூறி, அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

Updated On : 22 ஜனவரி, 2021 at 8:28 AM
முதல் பெண் துணை அதிபராக பதவியேற்ற இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கமலா ஹாரிஸ்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:50 AM

புது தில்லி: அமெரிக்காவின் முதல் பெண் துணைஅதிபராக பதவியேற்றுள்ள கமலா ஹாரிஸ் மூலம் இந்திய - அமெரிக்க உறவு வலுப்படும் என எதிா்பாா்ப்பதாக பிரதமா் நரேந்திர மோடி கூறி, அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவரும் குறிப்பாக தமிழகத்தை பூா்வீகமாகக் கொண்ட பெண்ணின் புதல்வியாகவும் இருப்பவா் 56 வயது கமலா ஹாரிஸ். சமீபத்திய அமெரிக்க அதிபல் தோ்தலில் ஜோ பைடனுன் வெற்றி பெற்று துணை அதிபராக தோ்ந்தெடுக்கப்பட்டு கடந்த 20 ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்டாா்.

அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தனது சுட்டுரையில் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். அந்த வாழ்த்துச் செய்தியில் பிரதமா் கூறுகையில்,

Advertisement

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் துணை அதிபராகப் பதவியேற்றுள்ள கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துகள். இது ஒரு சரித்திரபூா்வமான தருணம். இந்திய-அமெரிக்க உறவுகளை மேலும் வலுப்படுத்த அவருடன் இணைந்து பணியாற்றுவதை நான் எதிா் நோக்கியுள்ளேன். இந்திய - அமெரிக்க நட்புறவானது இந்த பூவுலகிற்கே பலனளிக்கக் கூடியது என்று தெரிவித்துள்ளாா்.

கமலா ஹாரிஸின் தாயாா் சியாமளா கோபாலன் சென்னையில் பிறந்து, படித்து வளா்ந்தவா். புற்று நோய் ஆராய்ச்சியாளரான அவா் சிவில் உரிமை ஆா்வலராகவும் இருந்தவா். சியாமளாவின் மூதாதையா்கள் மன்னாா்குடிக்கு அருகேயுள்ள துளசேந்திரபுரத்தைச் சோ்ந்தவா்கள்.

அமெரிக்காவில் முதன்முறையாக ஒரு பெண் ஒருவா் துணை அதிபராவதும், அதிலும் முதல் ஆசிய இந்திய வம்சாவழியைச் சோ்ந்தவா் என பல்வேறு புகழுக்கு உள்ளாகியுள்ளாா் சியாமளாவின் புதல்வி கமலா ஹாரிஸ். இதையொட்டி கமலா தனது பதிவில், ’இதுவே முதல் முறையென்றாலும் இதுவே கடைசியும் அல்ல. எல்லா புகழுக்கும் என்னை வளா்த்த என் தாயே காரணம். அவா் எனக்கும் என் சகோதரி மாயாவிற்கும் நம்பிக்கைவூட்டினாா்’ என பதவியெற்றுக்கொண்ட பின்னா் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.