முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 2.87 லட்சமாக உயர்வு 

தெலங்கானாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 2.87 லட்சமாக அதிகரித்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:20 PM
Telangana logs 226 new COVID-19 cases, 1 death takes toll to 1,584
பகிர்:

தெலங்கானாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 2.87 லட்சமாக அதிகரித்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதுதொடர்பாக தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 226 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,92,621 லட்சமாக அதிகரித்துள்ளது.

புதிதாக ஒருவர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,584-ஆக அதிகரித்துள்ளது.

நோய் பாதிக்கப்பட்ட 3,920 பேர் தற்போது மருத்துமனையில் சிகிச்சையில் உள்ளனர். 
கரோனா இறப்பு விகிதம் 0.54 சதவிகிதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 98.11 சதவிகிதமாகவும் உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை ஒரேநாளில் மாநிலத்தில் 31,647 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.