சைவ உணவு சாப்பிடுவோருக்கு கரோனா பரவும் அபாயம் குறைவு? 
இந்தியா

சைவ உணவு சாப்பிடுவோருக்கு கரோனா பரவும் அபாயம் குறைவு?

அதில் எந்த அளவுக்கு உண்மை என்பது நிரூபிக்கப்படவேயில்லை.

DIN


2020-ஆம் ஆண்டு மே மாதம் சைவ உணவு சாப்பிடுவோருக்கு கரோனா பரவுவதில்லை என்றும், உடலில் விலங்குகளின் கொழுப்புத் தன்மை இருந்தால்தான் கரோனா வைரஸால் உயிர்பிக்க முடியும் என்றும் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியது.

ஆனால், அதில் எந்த அளவுக்கு உண்மை என்பது நிரூபிக்கப்படவேயில்லை.

ஆனால், தற்போது பான் - இந்தியா ஸீரோ சர்வே நடத்திய சிஎஸ்ஐஆர் ஆய்வில், அசைவம் உண்பவர்களை விடவும், சைவம் உண்பவர்களுக்கு கரோனா தொற்றுப் பரவும் ஆபத்துக் குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, புகைப்பிடிப்பவர்களுக்கும், சைவ உணவை மட்டும் சாப்பிடுபவர்களுக்கும் ஏ மற்றும் ஓ ரத்த வகை உடையவர்களுக்கும் கரோனா தாக்கும் அபாயம் குறைவாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

சிஎஸ்ஐஆரின் 40 மையங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல்கள் தெரிய வந்துள்ளது.

அதன்படி, தனியார் போக்குவரத்தைப் பயன்படுத்துவது, கரோனா பரவும் அபாயப் பகுதிகளுக்குச் செல்லாமல் இருப்பது, புகைப்பிடித்தல், சைவ உணவை மட்டும் சாப்பிடுவது, ஏ மற்றும் ஓ ரத்த வகை உடையவர்களுக்கு கரோனா பரவும் வாய்ப்பு குறைவாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே, சைவப் பிரியர்களுக்கு இதய நோய், உடல்பருமன், ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் தாக்கும் அபாயம் குறைவு என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது கரோனா பரவும் அபாயமும் குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

தினம் தினம் திருநாளே!

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

பெரம்பலூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா!

அதிமுகவை ஆா்எஸ்எஸ் வழிநடத்துவதில் என்ன தவறு? மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கேள்வி

SCROLL FOR NEXT