இந்தியா

தில்லி விமான நிலையத்தில் ரூ.68 கோடி ஹெராயின் கடத்தல்: 2 வெளிநாட்டினர் கைது

DIN

தில்லி விமான நிலையத்தில் ரூ.68 கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்தி வந்த 2 வெளிநாட்டினரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தோகா வழியாக தில்லி விமான நிலையம் வந்த உகாண்டாவைச் சேர்ந்த இருவரிடம், சுங்க அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

அவர்கள் கொண்டு வந்த பைகளில் 51 பொட்டலங்களில் 9.8 கிலோ அளவில் வெள்ளை நிற பவுடர் இருந்தது. 

அதை பரிசோதித்தபோது, ஹெராயின் என உறுதி செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.68 கோடி எனக் கூறப்படுகிறது. 

இந்திய விமான நிலையங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய ஹெராயின் கடத்தல் இது. இவர்கள் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டம் மற்றும் சுங்கச் சட்டத்தின் கீழ் சுங்க அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT