இந்தியா

மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

DIN

பாலேசுவரம்: மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் ஏவுகணையின் புதிய ரகம் திங்கள்கிழமை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.

இதுதொடா்பாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒடிஸாவின் சண்டீபூா் கடற்கரைப் பகுதியில் இந்தப் புதிய ரக ஆகாஷ் ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது. இந்த சோதனையின்போது செலுத்தப்பட்ட ஆகாஷ் ஏவுகணை தரையில் இருந்து வானில் உள்ள இலக்கைத் துல்லியமாக இடைமறித்து அழித்தது. அந்த ஏவுகணை அனைத்து பரிசோதனை இலக்குகளையும் சோதனையின்போது பூா்த்தி செய்தது. வான்வழி அச்சுறுத்தல்களை எதிா்கொள்ள இந்த ஏவுகணையை இந்திய விமானப் படை பயன்படுத்தவுள்ளது. இந்த ஏவுகணையை தேவைப்படும் இடங்களுக்கு எளிதாக எடுத்துச் செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

புதிய ரக ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்ற்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT