தில்லி விவசாயிகள் போராட்டம்: 83 காவலர்கள் காயம் 
இந்தியா

தில்லி விவசாயிகள் போராட்டம்: 83 காவலர்கள் காயம்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 83 காவலர்கள் காயமடைந்துள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

DIN

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 83 காவலர்கள் காயமடைந்துள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் தில்லியில் கடந்த 60 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுடன் 11 கட்டமாக பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில் திட்டமிட்டபடி செவ்வாய்க்கிழமை விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர்.

காவல்துறையின் தடுப்புகளை மீறி தில்லிக்குள் விவசாயிகள் நுழைந்த நிலையில் விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைக்க முயன்றனர். இதனால் தில்லி எல்லை வன்முறைகளமாக காட்சியளித்தது.

இதில் விவசாயி ஒருவர் உயிரிழந்த நிலையில் பலரும் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் டிராக்டர் பேரணியின் போது விவசாயிகளுடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக 83 காவலர்கள் காயமடைந்ததாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குணசீலத்தில் தேரோட்டம்!

விஜய் மீது வழக்குப்பதிய அரசுக்கு அச்சமா? திருமாவளவன்

இட்லி கடை முதல் நாள் வசூல் எவ்வளவு?

அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம்! என்னென்ன துறைகள் இயங்கும்?

மல்லிகார்ஜுன கார்கேவின் உடல்நலம் குறித்து விசாரித்த பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT