கோப்புப்படம் 
இந்தியா

பேரணியில் ஏற்பட்ட வன்முறைக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்: யோகேந்திர யாதவ்

​விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை குறித்து வெட்கப்படுகிறேன் என ஸ்வராஜ் இந்தியா தலைவர் யோகேந்திர யாதவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

DIN


விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை குறித்து வெட்கப்படுகிறேன் என ஸ்வராஜ் இந்தியா தலைவர் யோகேந்திர யாதவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்துக்கு யோகேந்திர யாதவ் தொடக்கம் முதல் ஆதரவு தெரிவித்து வருகிறார். இதுபற்றி தொலைக்காட்சி சேனலிடம் அவர் பேசியது:

"போராட்டத்தின் அங்கமாக இருப்பதால் போராட்டம் நடந்த விதம் குறித்து நான் வெட்கப்படுகிறேன். இதற்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். வன்முறையின் தாக்கம் எந்தவொரு போராட்டத்தையும் தவறான கண்ணோட்டத்துக்கு மாற்றிவிடும். யார் செய்தார்கள், யார் செய்யவில்லை என்பதை என்னால் இப்போது கூற முடியாது. ஆனால், முக்கியக் குற்றவாளிகள் விவசாயிகள் போராட்டத்திலிருந்து தள்ளிவைக்கப்பட்டவர்கள்போல் தெரிகிறது.

நாம் எந்தப் பாதையில் போக வேண்டும் என்று முடிவு செய்துள்ளோமோ அந்தப் பாதையில்தான் பயணிக்க வேண்டும், வழி மாறக் கூடாது என்று நான் தொடர்ச்சியாக வலியுறுத்தினேன். இந்த இயக்கம் அமைதி வழியில் பயணித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்."  

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு மற்றும் விவசாய சங்கங்கள் இடையே நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இந்த நிலையில், தில்லியில் செவ்வாய்க்கிழமை மாபெரும் டிராக்டர் பேரணி நடைபெற்றது.

நண்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்கூட்டியே பேரணி தொடங்கியது. இதையடுத்து, காவல் துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் பேரணியைத் தடுத்து நிறுத்த முயற்சித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'நீங்கள் உண்மையில் இந்தியராக இருந்தால்...' - ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

நான் திமுகவின் பி டீமா? பன்னீர்செல்வம் விளக்கம்!

செத்த பொருளாதாரம்: அவமரியாதையே தவிர அர்த்தம் கொள்ளக் கூடாது: சசி தரூர்!

கோபி, சுதாகர் படத்தின் போஸ்டர் வெளியீடு!

நான் அழுதுவிடுவேன் என பயம் வந்துவிட்டது!: Kamal Hassan | Agaram foundation

SCROLL FOR NEXT